சென்னை:
பஸ் உரசி சென்ற பிரச்னையில் அதிரடியாக நடந்துள்ளார் விஜய்யுடன் நடித்த கதாநாயகி.


என்ன விஷயம் தெரியுங்களா? விஜய் நடித்த காவலன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மித்ரா குரியன். இவர் பெரம்பாவூர் பகுதியில் காரில் சென்ற போது ஒரு அரசு பஸ் உரசிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.


அவ்வளவுதான் அந்த பஸ்சை விரட்டி சென்று மடக்கிய மித்ரா... டிரைவருடன் கடும் வாக்குவாதத்தில் இறங்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் கார் சாவியை பறித்துகொள்ள ஏககளேபரம் நடந்துள்ளது.


பின்னர் போலீசார் விரைந்து வந்து 2 தரப்பினரையும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். அட அம்புட்டு கோபக்காரியாம்மா... நீ...



Find out more: