சென்னை:
ப்ரோ... நன்றி... உங்கள் நடிப்பு அருமை என்று ஸ்டைலிஸ் இயக்குனர் பாராட்டி தள்ளியுள்ளார் இவரை. யார் அவர் தெரியுங்களா?


தெரிஞ்சுக்குவோம். ஸ்டைலிஸ் இயக்குனர் என்று பெயர் பெற்ற கவுதம் வாசுதேவ் மேனன்தான் சிம்புவை பாராட்டி உள்ளார். இந்த கூட்டணியில் வந்த படத்தின் ஹிட் இவர்களை அடுத்த படத்தில் இணைய வைத்தது.


அந்த படம் அச்சம் என்பது மடமையடா... இந்த படம் ஆரம்ப கட்டத்திலேயே ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தியது. இப்படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தது. ஆனால் இயக்குனர்-ஹீரோ இருவருக்கும் ஏற்பட்ட லடாய் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் கட்டி போட்டு வைத்துள்ளது.


ரசிகர்களின் செம விருப்பத்திற்கு உள்ளான அந்த பாடல் படத்தில் இடம்பெறாது என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியாக்கி இருந்தது. ஆனால் எப்படியோ படக்குழுவினர் தள்ளிப் போகாதே என்ற ஹிட் பாடலை சமீபத்தில் பல்கேரியாவில் படமாக்கி உள்ளனராம்.


தற்போது இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், படத்தில் சிம்புவின் நடிப்பை பாராட்டி தள்ளியுள்ளார். மேலும் நன்றியும் தெரிவித்துள்ளார். அப்போ படம் எப்போங்க ரிலீஸ்.



Find out more: