சென்னை:
சைலண்டாக இயக்குனர் செய்த வேலைக்கு ஹீரோவுக்கு கிடைத்துள்ளது "பளார்" பரிசு. என்ன மேட்டர் தெரியுங்களா?
இதோ சொல்லிடுவோம். மானஸ், அமரன் நடிக்கும் படம் ‘மெய்மை’. டி.எஸ்.திவாகரன் இதை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் ஹீரோவின் கன்னம் பழுத்துள்ளது. விஷம் இதுதாங்க... காட்சி தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக இயக்குனர் ஹீரோவிடம், ஹீரோயினை அணைத்து முத்தமிட வேண்டும் என்பதை ரகசியமாக சொல்லிவிட்டு கேமராமேனிடம் ‘ஸ்டார்ட்’ சொல்லியிருக்காருங்க...
ஆஹா... இயக்குனரே இப்படி சொல்லும் போது என்று கதாநாயகன் ரஜின்னும் யாரும் எதிர்பாராத வகையில் ஹீரோயின் வித்யாபநீயை அணைத்து முத்தமிட... அப்புறம் என்ன ஹீரோயின் கரம் ஹீரோவின் கன்னத்தை முத்தமிட்டுள்ளது. "பளார்" என்ற அறை விழுந்ததால் ரஜின் ஆடிப் போய் உள்ளார். உடனே ஓடி வந்த இயக்குனரும், கேமராமேனும் நிலைமையை விளக்கி சொன்னதும் தன் தப்புக்கு ஹீரோயின் மன்னிப்பு கேட்டாராம். என்னங்க இது கூத்து.