'சென்னை 600028' திரைப்படத்தின் மூலம் நடிகராக, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மிர்ச்சி சிவா தற்போது வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'சென்னை 600028 - 2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 10-ந்தேதி வெளிவருகிறது. 


இந்நிலையில் மிர்ச்சி சிவா இயக்குனராகியுள்ளார். இதுவரை திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த அவர் முதன்முறையாக ஒரு புது திரைப்படத்தை இயக்க போகிறாராம். இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு, ஒரு பேட்டியில் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது,


மிர்ச்சி சிவா இயக்கவுள்ள படத்தை, நான், எனது பிளாக் டிக்கட் கம்பெனி சார்பில் தயாரிக்க உள்ளேன். சிவா கதை சொன்னதுமே, நான் முடிவு செய்துவிட்டேன், இந்த படத்தை நம்ம தான் தயாரிக்கணும் னு.... இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்களை, தெரிவிக்கும் வகையில், வித்தியாசமான கதையை கொண்டு இப்படம் உருவாகவுள்ளது' என்று கூறினார். 


மேலும் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find out more: