அண்மையில் விக்ரம் நடித்த 'இருமுகன்' திரைப்படம் வெளிவந்தது. இந்த படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகின்றது. 


இதையடுத்து விக்ரம், சாக்ரடிஸ் இயக்கவுள்ள ஒரு புது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் சாக்ரடிஸ், சசிகுமார் நடித்த 'பிரம்மன்' திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.


இதனையடுத்து விக்ரம், 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் நடித்த 'சாமி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஹரி இயக்க, 'இருமுகன்' தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். 


இதில் விக்ரம் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளாராம். தற்போது வாங்கி வரும் சம்பளத்திலிருந்து 4 கோடிகள், 'சாமி-2'விற்கு  உயர்த்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். 


மேலும்,சாமி வசூல் ரீதியாக சாதனை படைத்து, வெற்றியடைந்ததால், இந்த படத்திற்கு விக்ரம் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாராக உள்ளாராம். 


Find out more: