சென்னை:
அம்மாடி அம்புட்டு தொலைவுல கூட நம்மாளுங்களுக்கு ரசிகர்களும், ரசிகைகளும் இருக்காங்களேப்பா... என்று கோலிவுட் கோகிலாக்கா வியந்து போய் செய்தியை சொல்லியிருக்காங்கப்பா...


என்ன விஷயம் என்றால்... சமூக வலைத்தளங்கில் ஒரு வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண் பேசுகிறார். அவரது கையில் ஒரு மொபைல் போன் இருக்கிறது.


அதன் டிஸ்பிளேயில் என்ன இருக்கிறது தெரியுங்களா? நம்ம கோலிவுட் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் புகைப்படம்தான். அந்த புகைப்படத்தை பார்த்து அந்த பெண் உருகி... உருகி பேசும் பேச்சு இருக்கிறதே... அட போங்கப்பா... பிறந்தால் நடிகராக பிறக்க வேண்டும் என்று தோன்றுகிறது. 


அந்த வீடியோவில் எந்த ரசிகை கூறும்போது “ விஜய் சேதுபதியை நான் மிகவும் நேசிக்கிறேன். விஜய் சேதுபதி.. உன்னுடைய கண், முகம், சிரிப்பு அனைத்தையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நீ ஒரு ஹேண்ட்சம். விஜய் சேதுபதியை ஒரு நாள் சந்திக்க வேண்டும்.


மிகச்சிறந்த நடிகர் விஜய் சேதுபதி. அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கேள்விப்பட்டதும் நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். விஜய் சேதுபதி.. உன்னை சந்திக்க ஒரு நாள் நிச்சயம் நான் வருவேன் என்று உருகு.. உருகு என்று உருகி உள்ளார். இப்போது சமூக வலைத்தளத்தை கலக்கும் வீடியோ இதுவாகத்தான் இருக்கும்.


Find out more: