சென்னை:
அப்படியா... அப்படியா... என்று கேட்டு கன்னத்தில் கைவைத்து நொந்து கொள்கிறது கோலிவுட்.


ஏன் தெரியுங்களா? சந்தானம் ஒரு படத்தில் சொல்வரே... சுடிதார் போட்ட அரேபியன் குதிரை என்று அனுஷ்காவை... அந்த அனுஷ்காதான் இப்படி ஒரு முடிவில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் அனுஷ்காவும் ஒருவர். பாகுபலி-2 உட்பட சில படங்களில் நடித்து வரும் இவர் தற்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். நல்ல விஷயதானே என்று நினைக்கிறீர்கள். இருங்க... இன்னும் விஷயம் இருக்கிறது.


ஆந்திராவில் பிரபல தயாரிப்பாளரை இவர் காதலிக்கிறாராம். அவர் சிரஞ்சீவி குடும்பத்தின் சொந்தக்காரராம். இந்த தயாரிப்பாளருக்கு  ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதாம் என்பதுதான் அதிர்ச்சிக்கு காரணம்... என்னம்மா... இப்படி பண்ணுறீங்களேம்மா...


Find out more: