தமிழ்சினிமாவில் குணச்சித்திர நடிகையாக அறிமுகமான லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது மூன்றாவது முறையாக 'அம்மணி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் விரைவில் வெளிவரும் நிலையில், நேற்று இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜெ.சூர்யா இந்த படத்தின் டிரைலரை தனது டிவிட்டர் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அம்மணி திரைப்படத்தின் தயாரிப்பாளர் வென் கோவிந்தா, எஸ்.ஜெ.சூர்யாவின் நெருங்கிய நண்பர். அதனால் அவருக்காக, எஸ்.ஜெ.சூர்யா நேற்று இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.
மேலும் வித்தியாசமான கதையை கொண்டு உருவான இந்த படத்தின் டிரைலர் மொத்தம் 87 நொடி ஓடுகிறது. இதை பார்த்து விட்டு, எஸ்,ஜெ.சூர்யா, 'அம்மணி' இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் 87 வயது பாட்டி சுப்புலக்ஷ்மி உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.