இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இயக்குனர் ராஜேஷ் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புது படத்தை இயக்க முடிவு செய்துள்ளனர். மக்களை சிரிப்பில் மூழ்கடிக்கும் வகையில் இப்படம் உருவாகவுள்ளதாம்.
ராஜேஷின் கதையில், வெங்கட் பிரபு இயக்கவுள்ள இந்த படத்தை 'அம்மா கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கவுள்ளார். இவர் தற்போது, ராஜேஷ், ஜிவி பிரகாஷை வைத்து இயக்கியுள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நகைச்சுவை கதையை கொண்டு உருவாகவுள்ள, பெயரிடப்படாத இந்த படம் நிச்சியம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் என தயாரிப்பாளர் சிவா நம்பிக்கை அளித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் நடிக்கவுள்ள கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த அதிகார பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.