இளம் பெண் இயக்குனரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளுமான சவுந்தர்யா ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். 


அடிப்படையில் ஒரு கிராபிக் டிசைனரான இவர் தனது தந்தை ரஜினி நடித்த 'பாபா', 'படையப்பா', 'சிவாஜி' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு டைட்டில் கிராபிக் டிசைன் செய்துள்ளார். 


இதையடுத்து சூப்பர் ஸ்டார் நடித்த 'கோச்சடையான்' திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை இயக்கியதன் மூலம் ரஜினியை இயக்கிய முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை சவுந்தர்யா பெற்றார்.


இதனையடுத்து சமீபத்தில் இவர் விலங்குகள் நலவாரிய தூதராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இன்று பிறந்த நாளை தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் சவுந்தர்யாவுக்கு தமிழ் ஹெரால்ட் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


Find out more: