விஜய் நடிக்கும் 'பைரவா' திரைப்படத்தில் டானியல் பாலாஜி வில்லனாக நடிக்கிறார் என்பதை நாம் அனைவரும் அறிந்தோம். 


இதையடுத்து உதயநிதி ஸ்டாலின், 'தூங்கா நகரம்' இயக்குனர் கவுரவ் இயக்கவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஹீரோயினாக மஞ்சிமா மோகன் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 


இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக டானியல் பாலாஜி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். த்ரில் கதையை கொண்டு உருவாகவுள்ள இந்த படத்தில் டானியல் பாலாஜியின் கேரக்டர் மிகவும் முக்கியமானது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find out more: