பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர், தங்களை விட வயது மூத்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் யார் யார்? என்பதை நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
1. ஊர்மிளா, தன்னை விட 10 வயது இளையவரான தொழிலதிபர் மொஹ்சின் அக்ஹதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

2. 70 வயதை தாண்டிய கபீர் பேடி, 28 வயது மட்டுமே ஆன பர்வீன் டுசஞ்சை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்தார்.

3. அசின், தன்னை விட 10 வயது மூத்தவரான மைக்ரோமேக்ஸ் உரிமையாளர் ராகுலை திருமணம் செய்து கொண்டார்.

4. ஷாஹித் கபூர், தன்னை விட 13 வயது இளையவரான மீரா ராஜ்புட்டை மணந்தார்.

5. இந்த தம்பதிகளுக்கு இடையே 10 வயது வித்தியாசம் உள்ளது. சைப், கரீனாவை காட்டிலும் 10 வயது பெரியவர்.

6. ரிதேஷ், ஜெனீலியாவை காட்டிலும் 9 வயது பெரியவர்.

7. சோஹா அலி கானை காட்டிலும், குணால் க்ஹெமு 5 வயது சிறியவர்.

8. அமீர் கானுக்கும், அவரது மனைவி கிரணுக்கும் இடையே 9 வயது வித்தியாசம்.

9. பாலிவுட் நடிகை ஹேமா மாலினிக்கும், அவரது கணவர் தர்மேந்திராவிற்கும் இடையே 13 வயது வித்தியாசம் உள்ளது.

10. திலீப் குமாரை காட்டிலும், சாய்ரா பானு 22 வயது இளையவர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தனர்.
