தமிழ்சினிமாவின் திறமையான நடிகைகளுள் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கைவசம் நிறைய படவாய்ப்புகள் வைத்துள்ளார். இவர் ஹிந்தியில் அர்ஜுன் ராம்பால் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். 


இந்நிலையில் மலையாளத்தில், பிரபல நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்கும் 'ஜோமோன்ட் சுவிசேஷங்கள்' திரைப்படத்தில், ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதில் முகேஷ், அனுபமா பரமேஸ்வரன், மனோபாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 


மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ், 'கடலை', 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்', 'கட்டப்பாவா காணோம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Find out more: