நடிகர் தனுஷ் முதன்முறையாக, ராஜ் கிரண் நடிக்கும் 'பவர் பாண்டி' திரைப்படத்தை இயக்குகிறார். இதில் நதியா, பிரசன்னா, சாயா சிங்க் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தனுஷ் இயக்கி, தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில், பூஜையுடன் தொடங்கியது.
![Image result for dhanush and rajkiran](http://s2.firstpost.in/wp-content/uploads/2016/09/Power-Pandi-pooja-pics.jpg)
இந்நிலையில் சமீபத்தில் தனுஷ், இந்த படம் குறித்து ஒரு பேட்டி அளித்தார். அப்போது, 'எங்கள் குடும்பத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே ராஜ்கிரண் சார் தான். எனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கிய முதல் படத்தில், இவர் நடிக்க ஒப்புக்கொண்டதால் தான் என் தந்தைக்கு சினிமாவில் நல்ல என்ட்ரி கிடைத்தது' என தெரிவித்தார்.
மேலும் ராஜ் கிரண், தனுஷை, மருமகன் என்று தான் அழைப்பாராம்.