மும்பை:
சர்ச்சை என்றால் சர்க்கரைப் பொங்கல் போல் இவருக்கு. ஒரு தென்னிந்திய நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்று அணுகுண்டை ஆகாயத்தில் இருந்து வீசியது போல் வீசியுள்ளார்.
யார் தெரியுங்களா? கபாலி படத்தின் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் ராதிகா ஆப்தே. இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் எப்போதும்ச ர்ச்சையை கிளப்பும்.
இவரிடம் ஒரு நிருபர் ஒரு கேள்வியை தூக்கி போட்டுள்ளார் என்ன வென்று தெரியுங்களா? நடிகைகள் ஆரம்ப காலங்களில்எ ன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்துவார்களே உங்களை அதுபோல் என்று கேட்க....
‘நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டவர்களை எனக்கு தெரியும். எனக்கு அது போன்று எதுவும் நடக்கவில்லை. ஒரு தென்னிந்திய நடிகர் என்னிடம் அப்படி நடக்க முயன்றார், நான் ஆரம்பத்திலேயே அவரை தவிர்த்துவிட்டேன்’ என்று சொல்லி அணுகுண்டை தூக்கி போட்டுள்ளார். இப்போ... அந்த தென்னிந்திய நடிகர் யார் என்பதுதான் காட்டு தீபோல பரவி வரும் அதிர்ச்சி...