மலையாள நடிகர் நிவின் பாலி தற்போது இரண்டாவது முறையாக 'சாண்டா மரியா' என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கன்னடத்தில் 2014-ம் ஆண்டு வெளிவந்த 'உளித்தவாறு கண்டந்தெ' திரைப்படத்தின் ரீமேக்காகும். 


கவுதம் ராமச்சந்திரன் இயக்கும் இந்த படத்தில் நிவின் பாலி, நட்டி நடராஜன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி ப்ரியா, சந்திரா மௌலி, இளங்கோ, பிரகாஷ் ராஜ், நவீன், நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


இந்நிலையில் இந்த படத்தில் தற்போது இன்னொரு நாயகன் இணைந்துள்ளார். அவர் யார் தெரியுமா?.... தெரியாதா...நானே சொல்லிடறேன்,... 'தெகிடி' திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த அசோக் செல்வன் தான், இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். 


அசோக் செல்வன்

Image result for ashok selvan


இதன் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் வரும் அக்டோபர் மாதம் 30-ம் தேதி, இப்படம் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Find out more: