சென்னை:
படத்தை பார்த்தார்... தங்க சங்கிலியை அணிவித்தார் என்று பரபர தகவலை சொல்றாங்க கோலிவுட் கோகிலாக்கா...


என்ன விஷயம் என்றால்... விஜய் சேதுபதி நடித்துள்ள ஆண்டவன் கட்டளை திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. இறுதிச்சுற்று படத்தின் நாயகி ரித்திகா சிங் தான் இந்த படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.


காக்க முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், முழு படத்தையும் பார்த்துவிட்டு அசந்துபோன தயாரிப்பாளர் அன்புசெழியன் உடனே தங்கசங்கிலியை விஜய் சேதுபதிக்கும், மணிகண்டனுக்கு பரிசாக கொடுத்துள்ளார். இது எப்படி இருக்கு. அப்போ படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் எகிறும் என்று சொல்லுங்க...



Find out more: