சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இதுவரை '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய இருதிரைப்படங்களையும் இயக்கினார். 


இதையடுத்து, அவர் அடுத்து ஒரு புது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக, செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அண்மையில் தனுஷ் அளித்த பேட்டி ஒன்றில், 'ஐஸ்வர்யாவின் அடுத்த படம் டிசம்பரில் தொடங்கும். பெண்களை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது' என்று தெரிவித்தார். 


மிக விரைவில் தொடங்கவுள்ள இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Find out more: