சென்னை:
நான் உங்க அப்பாவின் ரசிகன்...இந்த வார்த்தைகளை கேட்ட குழந்தைகளின் முகம் 1000 வாட்ஸ் பல்ப் போல் பிரகாசம் ஆனதாம். சொன்னது யார்... மகிழ்ந்தது யார் தெரியுங்களா?
தன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் தோனி கலந்து கொண்டார். இதில்தான் அந்த மகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினாராக ஜோதிகாவும் அவரது குழந்தைகள் தியா, தேவும் கலந்துக்கொண்டனர். குழந்தைகள் இருவரும் தோனிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க, அவர் மேடையிலேயே ‘நான் உங்க அப்பாவுடைய ரசிகன்’ என்று குழந்தைகளிடம் கூறினார் பாருங்க... இதை கேட்டு அரங்கமே அதிர, தியா, தேவ் இருவர் முகத்திலும் சந்தோஷமோ... சந்தோஷம்...