தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகர்கள் இவர்கள் தான்.
ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோலிவுட்டின் முன்னணி நடிகராக விளங்குகிறார். இவருக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு, சுமார் 50 கோடி சம்பளம் பெறுகிறார்.
கமல் ஹாசன்

உலக நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்படும் கமல் ஹாசன், ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு 25 முதல் 30 கோடிகள் வரை சம்பளம் பெறுகிறார்.
விஜய்

நடிகர் விஜய், 'தெறி' என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கடைசியாக நமக்கு அளித்தார். இதையடுத்து பைரவா உருவாகி வருகிறது. இவர் ஒரு திரைப்படத்திற்கு 25 கோடிகள் சம்பளம் வாங்குகிறார்.
அஜித்

கோலிவுட்டில் தல என்று அழைக்கப்படும் அஜித், ஒரு படத்திற்கு 20 முதல் 25 கோடிகள் வரை சம்பளம் பெறுகிறார்.
பிரபாஸ்

உலகளவில் ஹிட்டான 'பாஹுபலி' திரைப்படத்தின் ஹீரோ பிரபாஸ்,தற்போது 20 கோடி சம்பளம் பெறுகிறார்.
பவன் கல்யாண்

தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள், பவனும் ஒருத்தர் ஆவார்.
சூர்யா

நடிகர் சூர்யா ஒரு திரைப்படத்திற்கு 18 கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார்.
மகேஷ் பாபு

இவருடைய சம்பளம் 16 கோடிகள்.
விக்ரம்

படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்து நடிப்பதில் பெயர் பெற்ற விக்ரம் ஒரு படத்திற்கு 12 கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார்.
ராம் சரண்

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் ஒரு படத்திற்கு 12 கோடிகள் சம்பளம் பெறுகிறார்.