சென்னை:
முதல் படம்னு சொன்னாங்க... ஆனால் 35 வருஷத்துக்கு முன்னாடியே வந்திடுச்சேன்னு ஒரு கூட்டம் இணையத்தில் இம்சை கொடுத்து வருகிறது. என்ன விஷயம் தெரியுங்களா?
தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வந்த தொடரி படம்தான் இப்படி இணையத்தில் இடிக்கப்படுகிறது. இந்த படம் வந்தவுடன் கோலிவுட்டின் இந்த படம்... ஹாலிவுட் படத்தின் காப்பி என்று கூக்குரல் எழுப்பினாங்க... படக்குழுவோ... முதல்முறையாக தமிழில் ரயிலில் எடுக்கப்பட்ட முழு படம் என்று சொல்ல... இவங்க ரவுசு குறையவே இல்லை.
தொடரி

இதற்கிடையில் இதற்கெல்லாம் முன்னாடி அதாவது 35 வருடங்களுக்கு முன்பே தி பர்னிங் டிரெயின் என்ற இந்தி படத்திலும் இதே கதை தானாம். அட போங்கப்பா... ரயில் கண்ட்ரோல் மீறி போக, ஹீரோ எப்படி ரயிலில் இருக்கும் அத்தனை பயணிகளையும் காப்பாற்றுகிறார் என்பதே அந்த படத்தின் கதை.
இப்படத்தின் தழுவல் தான் தொடரி என்று அலப்பறையை ஆரம்பிச்சுட்டாங்க... எல்லா படங்களுமே ஏதாவது ஒரு படத்தின் இன்ஸ்பிரஷன்தானே!