சினிமாவில் நட்சத்திரங்கள் எந்த அளவிற்கு பிரபலம் அடைகிறார்களோ, அந்த அளவிற்கு சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இங்கு அதிகமாக சர்ச்சைகளில் சிக்கியுள்ள சில நட்சத்திரங்களை தேர்ந்தெடுத்து உள்ளோம். அவற்றின் தொகுப்பு இதோ...
1. ராஜ் கபூர்

பாலிவுட் பழம்பெரும் நடிகர் ராஜ் கபூர், பழம் பெரும் முன்னணி நடிகைகளான வைஜயந்தி மாலா, நார்க்கிஸ், ஸீனத் அமன் ஆகியோருடன் இணைத்து, பல சமயங்களில் பேசப்பட்டார்.
2. ராஜேஷ் கண்ணா

இவர் டிம்பிளை திருமணம் செய்வதற்கு முன்பு, வேறு சில பெண்களோடு தொடர்பில் உள்ளார் என சர்ச்சைகள் கிளம்பியது.
3. அமிதாப் பச்சன்

பொது நிகழ்ச்சி விழாவிற்கு, மனைவி உடன் வருகை தந்த அமிதாப், மனைவியை அனைவரது முன்பும் உதட்டில் முத்தமிட்டது, பெரும் சர்ச்சையானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
4. சல்மான் கான்

குடிபோதையில் காரை ஒட்டி, ஒருவரை பலிகேடாக்கினார் சல்மான் கான். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையானது.
5. சஞ்சய் தத்

வெடிகுண்டு வழக்கில் சஞ்சய் தத் சிக்கி, பல ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று வந்தார்.
6. ஷாருக்கான்

இவரும் பிரியங்கா சோப்ராவும் நெருக்கமாக பழகி வந்தது, பாலிவுட்டில் சர்ச்சையானது.