சென்னை:
என்னோட டார்லிங் அவர் என்று செல்லம் கொஞ்சி உள்ளார் இந்த நடிகை. யார் அந்த டார்லிங்... யார் அந்த நடிகை என்று பார்ப்போமா!
இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்திகா சிங்தான் அவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ஆண்டவன் கட்டளை ரசிகர்களிடம் செம வரவேற்பு பெற்று கல்லா கட்டி வருகிறது. இதனால் இவரது 2வது படமும் ஹிட் வரிசையில் சேர்ந்து விட்டது.
இப்படத்தில் ரித்திகாசிங்கின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இவர் லாரன்ஸிற்கு ஜோடியாக சிவலிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி பற்றிய கேள்விக்கு... ‘அவர் என் டார்லிங், படப்பிடிப்பில் என் நடிப்பிற்காக மிகவும் சப்போர்ட் செய்தார்’ என்று செல்லமாக தெரிவித்துள்ளார்.
அவரோட குடும்பத்தில் கும்மி அடிச்சுடாதீங்கம்மா...