மும்பை:
போடுங்க... போடுங்க... அந்த டாட்டூவை போடுங்க என்று இளம் பெண்கள் குவிகின்றனர். இந்த "புண்ணியம்" முழுவதும் அந்த நடிகைக்கே... என்று மும்பைவாலாக்கள் சொல்றாங்க... என்ன விஷயம் தெரியுங்களா?
பிங்க் படத்தில் டாப்ஸி கழுத்தில் இருக்கும் டாட்டூ போன்று எங்களுக்கும் போட வேண்டும் என்று இளம்பெண்கள் டாட்டூ கடைகளில் கியூ கட்டி நிற்பதால் கல்லா நிரம்போ... நிரம்பு என்று நிரம்புகிறதாம். இப்போ இது புதுசு கண்மணி ஆகிறிடுச்சு போல...
அனிருத்தா ராய் சவுத்ரி இயக்கத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்த பிங்க் படம் கடந்த 16ம் தேதி வெளியானது. செம ஹிட் அடித்துள்ள இந்த படத்தில் டாப்ஸியின் நடிப்பும் பாராட்டுகளை குவித்து வருகிறது.
படத்தில் டாப்ஸியின் கழுத்தில் பறவை றெக்கை முளைத்து பறக்கும் காட்சியை டாட்டூவாக போட்டிருப்பார். இப்போது இந்த டாட்டூதான் மும்பை இளம் பெண்களிடம் வைரலாகி வருகிறது. இதனால் டாட்டூ கடைகள் பெண்களால் நிரம்பி வழிகிறதாம்.
கழுத்து எலும்பு இருக்கும் இடத்தில் டாட்டூ போட்டால் வலிக்கும். இருந்தாலும் பரவாயில்லை என்று அடம் பிடித்து அந்த டாட்டூவை போட்டுவிட கூறி இளம் பெண்கள் வரிசைக்கட்டி நிற்கிறார்களாம். கோலிவுட்டில் நதியா ஏற்படுத்தி டிரெண்ட் போல... இப்போது பாலிவுட்டில் டாப்ஸி என்கின்றனர்.