'ரஜினி முருகன்' திரைப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வந்த 'ரெமோ' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாற்றியுள்ளார். இசை பணிகளை அனிருத் மேற்கொண்டுள்ளார். 


இரண்டாவது முறையாக, இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் சென்சார் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 


தணிக்கை குழுவினர் 'ரெமோ'வை பார்த்துவிட்டு, சுத்தமான 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கு தமிழ்நாடு வரி விலக்கு சலுகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. 


மேலும் இப்படம் வரும் அக்டோபர் 7-ந்தேதி, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் திரையரங்கிற்கு வருகிறது.


Find out more: