சென்னை:
அப்ப நாங்க என்ன இளிச்சவாயா... இதை சும்மா விடமாட்டேன் என்று நாட்டாமை பஞ்சாயத்தை கூட்டுங்க என்று தயாரிப்பாளர் ஒருவர் களத்தில் குதித்துள்ளார்.


விஷயம் என்னன்னா? தமன்னா பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று தன் திறமையை காட்டி வருகிறார். தற்போது இவர் நடித்து வரும் படங்கள் ஹிட் அடிப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்.


இவர் நடிப்பில் அடுத்த வாரம் தேவி படம் வெளிவரவுள்ளது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் தமன்னா கலந்து கொண்டார். இதுதான் தற்போது ஒரு தயாரிப்பாளரை டென்ஷன் ஆக்கி பஞ்சாயத்தை கூட்டும் படி செய்துள்ளதாம். 

Image result for tamanna in devi press release

தர்மதுரை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்த படத்தில் நடித்த தமன்னா கலந்துக்கொள்ளவில்லை. இப்போ... தேவி படத்திற்கு மட்டும் வந்துள்ளார் என்பதால் தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்து விட்டாராம். சிக்கிட்டாங்கய்யா... சிக்கிட்டாங்க...


Find out more: