சென்னை:
அந்த டுவிட்டுக்கும் என் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தடார் என்று ஜகா வாங்கி உள்ளார் வரலட்சுமி.


நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு டுவிட் பற்றிய செய்தி வெளியானது. என்ன தெரியுங்களா? 


வரலட்சுமி நடிகர் விஷாலை காதலிக்கின்றார் என ஒரு செய்தி நீண்ட நாட்களாக உலா வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதை இருவருமே எப்போதும் மறுத்ததில்லை.


இந்நிலையில் நேற்று வரலட்சுமி தன் டுவிட்டர் பக்கத்தில் ‘7 வருட காதல் முறிந்தது’ என்பது போல் குறிப்பிட்டு இருந்தார். இதனால் பரபரப்பை பற்ற வைத்தது போல் ஆனது. 


இதை தொடர்ந்து வரலட்சுமி ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். என்னன்னு தெரியுங்களா? ‘அந்த ட்வீட்டில் முதலில் நான் என்னைப் பற்றி சொல்லவே இல்லை. அதற்கும் என் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை' என்று... எப்படி இருக்கு இந்த அந்தர் பல்டி... நடத்துங்கப்பா... ரசிகர்களை நல்லா குழப்புங்கப்பா...


Find out more: