ஏ.எல்.விஜய் இயக்கத்தில் முதன்முறையாக பிரபு தேவா, தமன்னா இணைந்து நடித்த 'தேவி' திரைப்படம் வரும் 7-ந்தேதி, இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. 


இந்த படத்தை பிரபு தேவா, தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இதில் சோனு சூத் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில்,அண்மையில் இந்த படம் தணிக்கை குழுவினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 


அவர்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு, சுத்தமான 'யு' சான்றிதழ் அளித்து, எல்லோரும் பார்க்கும் வகையில் இப்படம் உள்ளது என்று அறிவித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 


மேலும் இப்படம் பழிவாங்கும் திகில் திரைப்படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Find out more: