சிங்கம் படத்தை மூன்று பாகங்களாக எடுத்து வெற்றியை குடுத்த இயக்குனர் ஹரி இப்பொழுது விக்ரமை வைத்து மெகா ஹிட்டான சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

அதற்கான நடிகர் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தில் கதாநாயகியாக சாமி முதல் பாகத்தில் நடித்த நடிகை திரிஷா தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் நடிகை திரிஷா.

கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா பாடல் சக்கை போடு போட்டது இந்த முறையும் அதே போல் பாடல் இடம் பெறுமா என்று ரசிகர் ஆர்வமாக உள்ளனர். என்ன இருந்தாலும் சாமிக்கு ஏற்கனவே மாமியுடன் முதல் பாகத்தில் திருமணம் நடந்ததால் இந்த முறை வேறு விதமாக பாடல் வரலாம் என்று எதிர்பார்க்கின்றனர்.