ஒரு காலத்தில் தொடர்ந்து தோல்வி படமாக வந்து கொண்டு இருந்த அஜித்திற்கு தன் வாழ்நாளில் மிகப்பெரிய திருப்பு முனையை தந்த திரைப்படம் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய வரலாறு திரைப்படம் தான்.

காட்பாதர் என்று பெயரிடப்பட்டு அதன்பின் வரலாறு என்று பெயர் மாற்றப்பட்டது. அஜித் மூன்று வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். மற்ற நடிகர்கள் நடிக்க தயங்கிய பெண்மையான ரோலில் நடித்து நடிப்புக்கு சவால் விட்டார்.

தற்பொழுது அந்த படத்தை தெலுங்கில் ஜூனியர் NTR நடிக்க போவதாக தகவல் வெளி ஆகி உள்ளது. அந்த படத்திற்கான இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை. யார் இருந்தாலும் ஜூனியர் NTR அவர்களுக்கு தன் வாழ்நாளில் வரலாறு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.