மலையாள திரையுலகில் உள்ள அனைவருக்கும் டிரைவர்கள் அனுப்பும் தொழிலை செய்து வந்தவன் தான் பாவனாவை கடத்திய சுனில். இவனுக்கு மலையாள திரையுலகில் உள்ள பெரும் புள்ளிகள் அனைவரின் பழக்கமும் உள்ளது.
யாருக்கு டிரைவர் வேண்டும் என்றாலும் இவனே அனுப்புவான் இவனும் டிரைவர் ஆக செல்லுவான்.
அப்படி யார் வீட்டிற்கு சென்றாலும் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே பழகிவிடுவானாம். இப்படி தான் பாவனாவிற்கு டிரைவர் ஆக சென்று குடும்ப உறுப்பினர் போல் பழக தொடங்கினான். வீட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்ல பாவனா அவனுக்கு அனுமதி குடுத்து இருந்தார்.
அதை அவனுக்கு சாதகமாக்கி கொண்ட அவன் பாவனாவின் படுக்கை அறையில் ரகசிய காமெராவை பொறுத்த முயற்சி செய்து இருக்கான். அதை பாவனாவின் தாயார் பார்த்துவிட்டார் எனவே அவனை வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்.
இதனையடுத்து பாவனா டிரைவர் வேலைக்கு ஆள் தேவை என்று நாளிதழில் விளம்பரம் கொடுத்ததை தொடர்ந்து தன் நண்பனை டிரைவர் வேலைக்கு அனுப்பியுள்ளான். அந்த நண்பனை வைத்து கடத்தல் திட்டத்தை அரங்கேற்றியுள்ளான்.