விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் 3 ஆகிய இரண்டு படங்களும் 4 நாளில் 100 வசூல் 6 நாளில் நூறு கோடி வசூல் என்று பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று திரைப்பட சங்கம் சார்பில் புகார் எழுந்துள்ளது.
இந்த இரண்டு படங்களால் நஷ்டம் தான் அடைந்து இருக்கோமே தவிர லாபம் சம்பாதிக்கவில்லை என்று தியேட்டர் சங்கம் சார்பில் புகார் அளித்து வருகின்றனர். எனவே சூர்யா மற்றும் விஜய் இதற்க்கு பொறுப்பேற்று நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இல்லை என்றால் இனிமேல் அவர்கள் திரைப்படம் தியேட்டரில் திரையிட மாட்டோம் என்று திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முடிவு எடுத்துள்ளனர்.
சிங்கம் 3 படம் வெற்றி அடைந்ததாக கூறி அந்த படத்தின் இயக்குனர் ஹரிக்கு சூர்யா ஃபார்சுனர் கார் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.