இயக்குனரும் நடிகருமாகிய பாக்கியராஜ் அவர்களின் ஒரே மகன் சாந்தனு நிறைய படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த எந்த படமும் வெற்றி அடையவில்லை. இருந்தாலும் விடாமுயற்சியால் அவர் படங்களில் நடித்துகொண்டு வருகிறார்.

தற்பொழுது முப்பரிமாணம் என்ற படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தில் தன் உழைப்பை இருமடங்கு செலுத்தி உள்ளதாக கூறுகிறார். படத்தின் ட்ரைலரை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை பார்த்து சந்தனுவை பாராட்டியதாக கூறினார்.

ஸ்டண்ட் காட்சிகளில் சிறப்பாக செயல்பட முடிந்ததிற்கு தல தான் என் இன்ஸ்பிரேஷன் என்று சந்தனு தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.