முன்பெல்லாம் ஒரு படம் வெற்றி என்பதை அந்த படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை வைத்து தான் சொல்லுவார்கள். ஆனால் இப்பொழுது ஒரு படம் எவ்வளவு தொகை வசூல் செய்கிறது என்பதை வைத்து வெற்றி படம் தோல்வி படம் என்று தீர்மானிக்கிறார்கள்.




இப்பொழுது முன்னணி நடிகர்கள் படம் வந்தாலே அந்த படம் 100 கோடி வசூல் செய்துவிட்டது  என்று தயாரிப்பாளர்கள் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் என்று விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து குற்றசாட்டு எழுப்பப்படுகிறது. படம் வெளி வந்த முதல் நாளே வெற்றி படம் என்று தீர்மானித்து அறிக்கை விடுகிறார்கள். குறிப்பாக விஜயின் பைரவா சூர்யாவின் சிங்கம் 3 ஆகிய படங்கள் 100 கோடி வசூல் செய்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிட்டார்கள்.



அதற்கு விநியோகிஸ்தர்கள் சார்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இனிமேல் படம் எவ்வளவு வசூல் செய்தது எவ்வளவு தொகைக்கு வாங்கியது என்று மாத மாதம் கூடும் விநியோகிஸ்தர்கள் கூடும் கூட்டத்தில் அறிவிப்போம் என்று பிரபல விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.



Find out more: