சிவகார்த்திகேயன் தனது காம்பெய்ரிங் திறமையால் சினிமாவில் உள்ளே வந்தவர். அவர் ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக வரவேண்டும் என்றுதான் முடிவில் இருந்தார். அவர் நடித்து முதலில் வெளி வந்த படம் 3 . இந்த படத்தில் தனுஷிற்கு நண்பனாக நடித்து இருந்தார்.

ஆனால் அவர் உண்மையில் முதன்முதலாக நடித்த படம் தல அஜித்தின் ஏகன். ஒரு வாரம் அந்த படத்தில் நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த காட்சிகளை பட குழுவினர் நீக்கி உள்ளனர்.