அஜித் படம் விஜய் படம் என்றாலே அவர்களின் ரசிகர்கள் ஆரவாரம் செய்துவிடுவார்கள். இந்நிலையில் இருவரும் ஒன்று சேர்ந்தால் இணையதளத்தில் அந்த நாளில் இவர்களின் சண்டையை தவிர வேறு எதுவும் நடக்காது.
ஒருவருக்கொருவர் கிண்டல் கேலி செய்து கொள்வார்கள். அதுவும் எந்த நடிகருடைய பர்ஸ்ட் லுக் அல்லது டீசர் அல்லது ட்ரைலர் வந்துவிட்டால் எதிர் தரப்பினர் கிண்டல் செய்ய தொடங்கி விடுவார்கள்.
ஆனால் இந்த முறை இருவருக்கும் ஒரே நாளில் விவேகம் படத்தின் டீசரும் விஜய் 61 படத்தில் பர்ஸ்ட் லுக்கும் வெளிவருகிறது. அன்று ஒருநாள் யாரும் ட்விட்டர் பக்கம் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாறி மாறி ட்ரெண்ட் செய்வார்கள்.