சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது 2 .௦ படத்தில் படு பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். அந்த படத்திற்கு பிறகு கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித்துடன் இணைந்து இன்னொரு படம் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வை ரஞ்சித் தொடங்கிவிட்டார் கதாநாயகியாக நடிக்க வித்யாபாலன் தீபிகா படுகோனே ஆகியவர்களிடம் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை குஷ்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

குஷ்புவிடம் இதனை பற்றி கேட்டபோது இது எப்படி ஒரு செய்தியாக நீங்கள் கேள்வி பட்டீர்களோ அதே மாதிரி தான் எனக்கும் தெரிந்தது. இது சம்மந்தமாக யாரும் என்னை அணுகவில்லை என்று குஷ்பு தெரிவித்தார்.