நடிகை நயன்தாரா ஐயா படத்தில் அறிமுகம் ஆகி இன்று தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்பவர். இவர் ரஜினி ,அஜித் ,விஜய்,சூர்யா ,விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார்..

சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியமான கதைகளாக தேர்வு செய்து கொண்டு வருகிறார் . அந்த வரிசையில் அவர் தேர்வு செய்து நடித்த படம் தான் "டோரா" இது ஒரு திகில் படம் இந்த படம் சென்சார் போர்டுக்கு சென்றதில் இந்த படத்திற்கு "ஏ" சான்றிதழ் கிடைத்துள்ளது "ஏ" சான்றிதழ் என்றாலே தப்பான படம் என்று தான் மக்கள் நினைப்பார்கள் என்று நயன் அப்செட்டில் உள்ளார்.

ஆனால் இந்த படத்தில் திகில் நிறைந்த காட்சிகள் நிறைய இடம் பெற்றுள்ளது எனவே குழந்தைகள் பயப்படுவார்கள் என்பதற்காக இந்த சான்றிதழ் கிடைத்துள்ளது என்று அந்த படத்தின் இயக்குனர் கூறினார்.