உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளாகிய ஸ்ருதிஹாசன் சூர்யா நடித்து A R முருகதாஸ் இயக்கி வெளிவந்த ஏழாம் அறிவு மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
இப்பொழுது முன்னணி நடிகர்கள் அஜித் விஜய் சூர்யா ஆகிய மூவரின் படங்களிலும் நடித்துவிட்டார். அதுமட்டும் இல்லாமல் விஷால் மற்றும் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கோலிவுட்டில் மாபெரும் வெற்றி படம் தலயுடன் நடித்த வேதாளம் தான். மிகவும் எதிர்பார்த்த புலி படம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் தல அஜித்தை பற்றி அவர் கூறியுள்ளார் அதாவது ஒரு மனிதர் எப்படி எளிமையாக இருக்க முடியும் என்பதை அஜித் சாரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார் அவ்வளவு எளிமையான மனிதராக அஜித் சார் இருப்பார்.