உலகநாயகன் கமலின் மகள்களாகிய ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சாரா ஹாசன் ஆகிய இருவரும் சினிமாவில் அடியெடுத்து வைத்து விட்டனர் இதில் ஸ்ருதிஹாசன் நிறைய படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.
ஆனால் தமிழ் சினிமாவில் அவருக்கு சொல்லி கொள்ளும் அளவில் வெற்றி படம் என்றால் அது தல அஜித்துடன் இணைந்து நடித்த வேதாளம் தான். இந்நிலையில் அவரின் சகோதரியாகிய அக்ஷரா ஹாசனும் தல அஜித்தின் விவேகம் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.
அது மட்டுமின்றி இவர் ஹிந்தியில் நடித்துள்ள லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா திரைப்படம் அடுத்த வாரம் வெளிவருகிறது. இந்த படத்தில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இப்படி ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்ததை கண்டு அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.