தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 22ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிமக்கப்பட்டார். 11 நாட்கள் சிகிச்சைப் பின்னர் நேற்று வீடு திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் திடீரென கடந்த 22ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள சூழலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து, அவரது மனைவி பிரேமலதா கூறும் போது, ஆண்டு தோறும் மேற்கொள்ளும் பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் விரைவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
இந்நிலையில் 11 நாள் சிகிச்சை எடுத்துக் கொண்ட விஜயகாந்த் குணம் அடைந்து நேற்று காலை 9 மணிக்கு வீடு திரும்பினார். சில நாட்கள் அவர் வீட்டில் ஓய்வு எடுத்த பின்பு ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.