விஜய் ,தனுஷ் ஆகியவர்களுடன் இணைந்து நடித்த அமலாபால் இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த பிறகு விஐபி 2, வட சென்னை, திருட்டு பயலே 2 படங்களில் நடித்து வருகிறார். சில மலையாள படங்களிலும் நடிக்கிறார்.
ஆனால் இவை அனைத்தும் இரண்டாம் தர நடிகர்களின் படங்கள்தான். எனினும் கிடைக்கும் வரை லாபம் என சம்பளத்துக்காக இவர் பல படங்களை ஒப்புக்கொண்டு வருகிறார். சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு என்றாலும் ஓகே சொல்லிவருகிறார்.
அந்தவகையில் தெலுங்கில் பூரி ஜகன்னாத் இயக்கத்தில் பாலையா நடிக்கும் புதிய படத்தில் இவர்தான் ஹீரோயின் என கூறப்படுகிறது. பாலையா இவரை விட 30 வயது மூத்தவர். காசுக்காக அமலாபால் இப்படியும் செய்வாரா என திரையுலகமே ஆச்சரியத்தில் உள்ளது.