
சினிமாவில் மட்டுமே வில்லன், நிஜத்தில் அத்தனை நல்ல எளிமையானவர் ஆனந்த்ராஜ். ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று இவர் கூறியது அனைவர் மத்தியிலும் பெரும் மரியாதையை வரவேற்பு பெற்றுள்ளது.
தற்போது பல படங்களில் காமெடியில் கலக்கி வரும் இவரிடம் சரத்குமார் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு குறித்து கேள்வி எழுப்பி அபிப்ராயம் கேட்டனர்.
இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘சரத்குமார் வீட்டில் ரெய்டு வந்தது சாதரண விஷயம் தான், ஆனால், பேட்டியில் என் மனைவி குளிக்கும் போது கதவை தட்டுகிறார்கள் என்பது போல் கூறினார்.
அது தேவையில்லாத வார்த்தை, இதன்மூலம் அவருக்கு அனுதாபம் வரும் என்று நினைத்தால் அது அவருடைய முட்டாள்தனம் தான்.
மேலும், ஒரு மணி நேரம் பாத்ரூமில் இருந்தால், ரெய்டு வந்தவர்களுக்கு, நீங்கள் ஒரு சில டாக்குமெண்ட்ஸுகளை மறைக்க தான் ஏதோ செய்கிறீர்கள் என நினைப்பார்கள்’ என வெளிப்படையாக கூறியுள்ளார்.