
பிரபல தொலைக்காட்சியில் டிடி என்கிற திவ்யதர்ஷினி நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிரபலமாக இருக்கும் இவர் அன்புடன் DD என்ற சிறப்பு நிகழ்ச்சியை தொடங்கியிருந்தார். பொதுவாக எந்த ஒரு பட புரொமோஷன் நிகழ்ச்சியாக இருந்தாலும் டிடி தான் அதற்கு தொகுப்பாளினி.
ஆனால் தற்போது அவருடைய அந்த நிகழ்ச்சி வேறொருவருக்கு கைமாறியிருக்கிறது.
அதாவது பவர்பாண்டி படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி படப்பிடிப்பு சமீபத்தில் விஜய் டிவியில் நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் டிடி பிரபலமாக செல்ல அந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி ரம்யா தொகுத்து வழங்கியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.