திரையரங்கு உரிமையாளரும் தமிழ் திரைப்பட விநியோகஸ்தர் பி. கண்ணப்பன் சமீபத்தில் ஒரு பேட்டியில் முக்கியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
அதுவது தமிழ் சினிமாவில் படம் நஷ்டம் என்றால் உடனே ரஜினி மற்றும் விஜய்யிடம் மட்டும் தான் செல்வார்கள். இந்த விஷயத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை. படம் நஷ்டம் என்றால் எல்லா நடிகர்களிமும் கேளுங்கள். கமல் மட்டுமே இதில் விதிவிலக்கு, அவர் நடிக்கும் பல படங்கள் அவரே தான் தயாரிக்கிறார்.
6 வயசிலிருந்து 6௦ வயசு இன்று வரைக்கும் நடிக்கிறார். இந்நேரம் மற்ற நடிகர்கள் மாதிரி மற்ற வெளி நிறுவனத்துக்கு அவர் படம் செய்து கொடுத்தால் சென்னையில் தி நகரே வளைத்து போட்டு இருக்கும் அளவிற்கு சம்பாதித்திருக்கலாம் என்று கூறினார்.