
மஞ்சிமா மோகன், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர். இந்த படத்திற்காக அறிமுக நாயகி என்ற விருது கூட இவருக்கு கிடைத்தது.
தற்போது இவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஒரு புதுப்படம் நடித்து வருகிறார். இப்படம் குறித்து அவர் பேசும்போது, ஓமனில் நாங்கள் நான்கு நாட்களாக ஒரு பாடல் படப்பிடிப்பில் தற்போது இருக்கிறோம்.
மொத்த படக்குழுவும் கடும் வெயிலில் பாடலை முடிக்க உழைத்து வருகிறோம். படத்தில் நடனம் ஆடுவது எனக்கு இதுதே முதன்முறை. அப்பாடலை மிகவும் எளிதாக முடிக்க உதவிய பிருந்தா மாஸ்டர் மற்றும் அவரது குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.