பாகுபலி படம் முலம் பெரும் புகழ் பெற்ற பிரபாஸுக்கு இந்த ஆண்டு இறுதியில் திருமணம் என்று கூறப்படுகிறது. பிரபாஸ் நடித்துள்ள பாகுபலி 2 படம் நாளை 28ம் தேதி ரிலீஸாகிறது. பாகுபலி 2 ட்ரெய்லர் தான் யூடியூபில் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட பட ட்ரெய்லர் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் பிரபாஸுக்கு கல்யாணப் பெண் பார்த்து வைத்துள்ளார்களாம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. பாகுபலி 2 ரிலீஸ் இருக்கும் நேரத்தில் திருமணம் பற்றி பேசினால் அனைவரின் கவனமும் படத்தில் இருந்து திரும்பிவிடும் என நினைத்து பிரபாஸ் இது குறித்து பேசாமல் தள்ளிப்போட்டிருக்கிறாராம்.
படம் ரிலீஸான பிறகு பிரபாஸ் தனது திருமணம் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.