

இப்போது பாகுபலி 2 வெளியானதும், மீண்டும் ரஜினி - ராஜமௌலி படம் குறித்த பேச்சுகள் விரியமாக கிளம்பியுள்ளன. இந்த முறை இருவரும் இணையும் படத்தின் அறிவிப்பு அனைவரையும் எதிர்ப்பார்க்க வைத்திருக்கிறது.

ரஜினிக்குப் பொருத்தமான கதை ஒன்றைத் தயார் செய்யப் போவதாக ஏற்கெனவே ராஜமௌலியின் தந்தையும் பாகுபலியின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் ஏற்கனவே கூறியிருந்தார்.
இப்போது அந்தக் கதை விவாதம் நடைபெறுவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரலாம் என்றும் எதிர்ப்பார்க்கபடுகிறது. இந்த அறிவிப்பு மட்டும் வெளியானால் உலக சினிமாவே அதிரும் என்பதில் மாற்றுக் கருத்திருக்காது!