
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படப்பிடிப்பு நடந்தபோது சுமார் 6 ஆயிரம் பெண்கள் பிரபாஸிடம் தங்களின் காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் நடிக்க வசதியாக பிரபாஸ் கடந்த 5 ஆண்டுகளில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. பெட்டி, பெட்டியாய் பணத்துடன் தயாரிப்பாளர்கள் அவரின் வீட்டிற்கு படையெடுத்தும் அவர் மசியவில்லை.இந்த தகவலை பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலியே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தெலுங்கு நடிகர் பிரபாஸாக இருந்த அவர் தற்போது உலக அளவில் பெரிய ஹீரோவாக காணப்பட்டுள்ளார். பாகுபலி படம் மூலம் உலக அளவில் பிரபாஸுக்கு ஏராளமான ரசிகைகள் கிடைத்துள்ளனர்.
பாகுபலி மற்றும் பாகுபலி படங்களில் நடித்தபோது அதாவது கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 6 ஆயிரம் பெண்கள் பிரபாஸிடம் தங்களை காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர். படப்பிடிப்பு தளங்களுக்கு நேரில் வந்து பெண்கள் தங்களின் காதலை தெரிவித்துள்ளனர்.