![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/movies/movies_latestnews/kshdjghd-415x250.jpg)
தான் கணவரை விவாகரத்து செய்யவில்லை என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குனரான கிருஷ்ண வம்சியை திருமணம் செய்தார். அவர்களுக்கு மகன் உள்ளார். இந்நிலையில் ரம்யா மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்.இதனால் அவர் விவாகரத்து செய்து விட்டதாக பரவலாக செய்தி பரவிவருகிறது.
அவர் கணவர் கிருஷ்ண வம்சி ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.கணவரை விவாகரத்து செய்யவில்லை. நாங்கள் இன்னும் ஒன்றாக தான் உள்ளோம். படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வசதியாக நான் சென்னையில் வசிக்கிறேன் என ரம்யா விளக்கம் தெரிவித்துள்ளார்.
என் கணவர் தெலுங்கு படங்களை இயக்குவதால் ஹைதராபாத்தில் வசிக்கிறார். நேரம் கிடைக்கும் போது எல்லாம் நான் ஹைதராபாத்துக்கோ இல்லை அவர் சென்னைக்கோ வந்து செல்வார் என ரம்யா கிருஷ்ணன் தெளிவாக கூறியுள்ளார்.ஒரே நேரத்தில் விடுப்பு கிடைத்தால் இருவரும் சேர்ந்து எங்காவது சுற்றுலா சென்று வருவோம். நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம் என்றும் கூறினார்.